அதிகரித்த வாக்கு சதவீதம் - புதுச்சேரியில் 89.83% பதிவு!

மாதிரிப் படம்
மாதிரிப் படம்
Published on: 

அசாம், கேரளம், புதுச்சேரி சட்டப்பேரவைகளுக்கான வாக்குப்பதிவில் முந்தைய தேர்தலைவிட கூடுதலாக வாக்குகள் பதிவாகியுள்ளன.

அதிகபட்சமாக, புதுச்சேரியில் சமகால வரலாறு காணாத அளவாக 89.83 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. 

கடந்த 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் புதுவையில் 83.42 சதவீதம்  வாக்குப்பதிவு நடைபெற்றது. 

கேரளத்தில் நேற்றைய வாக்குப்பதிவில் 78.03 சதவீதம் அளவுக்கு வாக்குகள் பதிவாகின. இதுவே முந்தைய தேர்தலில் 76 சதவீத வாக்குகளே பதிவாகியிருந்தன. 

அசாம் மாநிலத்தில் நேற்றைய வாக்குப்பதிவில் 85.38 சதவீத வாக்குகளும், முன்னைய தேர்தலில் 82.42 சதவீத வாக்குகளும் பதிவானது குறிப்பிடத்தக்கது.  

logo
Andhimazhai
www.andhimazhai.com