புதுச்சேரி மக்களவைத் தொகுதி பா.ஜ.க.வுக்கு ஒதுக்கப்படுவதாக முதலமைச்சர் ரங்கசாமி கூறியுள்ளார்.
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு உட்பட பல்வேறு விவகாரங்களில் தீவிரம் காட்டி வருகின்றன. புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள என்.ஆர். காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருவதால், மக்களவைத் தேர்தலில் அந்த கூட்டணி சார்பில் யார் வேட்பாளராக அறிவிக்கப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
இந்நிலையில், புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் ரங்கசாமி, புதுச்சேரி மக்களவைத் தொகுதி பா.ஜ.க.வுக்கு ஒதுக்கப்படுவதாகவும், வேட்பாள யார் என்பதை பா.ஜ.க. விரைவில் அறிவிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே, மாநிலங்களவை உறுப்பினர் பதவியை பா.ஜ.க.வுக்கு விட்டுக் கொடுத்துள்ள ரங்கசாமி, தற்போது மக்களவைத் தொகுதியையும் பா.ஜ.க.வுக்கு விட்டுக் கொடுத்துள்ளார்.