பூவுலகின் நண்பர்கள் அறிக்கை
பூவுலகின் நண்பர்கள் அறிக்கை

10 ஆண்டுகளில் சுற்றுச்சூழல் பாதிப்பு- பூவுலகின் நண்பர்கள்

கடந்த பத்து ஆண்டு கால பா.ஜ.க. ஆட்சியில் பல சுற்றுச்சூழல் அம்சங்களில் நாடு பின்தங்கியுள்ளது என்று பூவுலகின் நண்பர்கள் சுற்றுச்சூழல் இயக்கம் கூறியுள்ளது. 

தேர்தலை முன்னிட்டு அந்த இயக்கத்தின் சார்பில் இதுகுறித்து தனி பிரசுரம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. 

“புவியின் சராசரி வெப்பநிலையை 1.5 °C அளவுக்கு உயராமல் தடுக்கவேண்டும் அனில் அடுத்த 6 ஆண்டுகளுக்குள் புவி வெப்பமயமாதலை மட்டுப்படுத்துவதற்கான பணிகளை முழுவீச்சில் மேற்கொள்ள வேண்டும் என IPCC தெரிவித்துள்ளது. பா.ஜ.க.வின் கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில் பல்வேறு சுற்றுச்சூழல் குறியீடுகளில் இந்தியா பின் தங்கியுள்ளது. ஆனால், பெரு நிறுவனங்களின் லாப நோக்கத்தை மட்டுமே கருத்தில் கொண்டு இந்தியாவின் சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டங்களை வலுவிழக்கச் செய்துள்ளது பா.ஜ.க. அரசு.

காடுகளை வணிக நோக்கில்  சுரண்டுவதற்காக திறந்து விட்டுள்ளது. இந்தியாவை மீண்டும் சரிசெய்ய முடியாத அழிவை நோக்கி நகர்த்திச் செல்லும் வகையிலாக அமைந்துள்ளது மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி.” என்றும் அவ்வமைப்பின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com