புயல் பாதித்த 4 மாவட்டங்களில் அரையாண்டுத் தேர்வு ஒத்திவைப்பு!

புயல் பாதித்த 4 மாவட்டங்களில் அரையாண்டுத் தேர்வு ஒத்திவைப்பு!

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு அரையாண்டு தேர்வு ஒத்திவைக்கப்பட்டதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. மற்ற மாவட்டங்களில் திட்டமிட்டபடி அரையாண்டுத் தேர்வு நடைபெறும்.

மிக்ஜம் புயல் காரணமாக, மேற்குறிப்பிட்ட மாவட்டங்களில் மின்சாரம், போக்குவரத்து, தகவல் தொடர்பு ஆகியவை பாதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக கடந்த மூன்று நாள்களாக இந்த மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சூழலில், நாளை முதல் 6ஆம் வகுப்பிலிருந்து 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு தொடங்கப்படவுள்ளது.

இந்நிலையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு மட்டும் அரையாண்டுத் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. மற்ற மாவட்டங்களில் திட்டமிட்டபடி அரையாண்டு தேர்வு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 4 மாவட்டங்களில் மட்டும் நிலைமை சீரானவுடன் அந்தந்தத் தலைமை ஆசிரியர்களுக்கு முழு அதிகாரம் அளித்து தனித்தனியாக வினாத்தாள் தயாரித்து அரையாண்டுத் தேர்வு நடத்த பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

நான்கு மாவட்டங்களில் நிலைமை சீரான உடன், அந்தந்த மாவட்டத் தலைமை ஆசிரியர்களுக்கு முழு அதிகாரம் அளித்து தனித்தனியாக வினாத்தாள் தயாரித்து அரையாண்டுத் தேர்வு நடத்த பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com