மின் கட்டண உயர்வு
மின் கட்டண உயர்வு

மின் கட்டண உயர்வு – அரசின் உண்மையறியும் குழு மறுப்பு!

மின் கட்டண உயர்வு என பரவும் தகவல் வதந்தியே என தமிழக அரசின் உண்மை கண்டறியும் குழு விளக்கம் அளித்துள்ளது.

தமிழ்நாட்டில் மின் விநியோகம் செய்வது முதல் மின்தொடா்பான பணிகள் அனைத்தையும் தமிழ்நாடு மின் உற்பத்தி - பகிா்மானக் கழகம், தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம், மின்வாரியம் உட்பட்ட நிறுவனங்கள் செய்துவருகின்றன. இந்த நிறுவனங்களின் வருவாய், நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு இல்லாமல், தொடர்ந்து இழப்புகள் அதிகரித்துவருவதால் ஜூலை மாதம் 1 ஆம் தேதி முதல் மீண்டும் மின்கட்டண உயா்வு வர உள்ளதாகத் தகவல் வெளியானது.

அந்தத் தகவல் வதந்தியே என தமிழக அரசின் உண்மை கண்டறியும் குழு கூறியுள்ளது.

"2022-ம் ஆண்டு ஜூலையில் வெளியான செய்தி தற்போது பகிரப்பட்டு வருகிறது. தற்போது மின் கட்டண உயர்வு செய்யப்படவில்லை. வதந்திகளை நம்பாதீர்கள். மின் கட்டணத்தை உயர்த்துவது குறித்து தமிழக அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை." என அக்குழுவின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com