தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவு அளிப்பதாக தி.மு.க. எடுத்த முடிவை மறுபரீசலனை செய்ய வேண்டும் என்று நடிகர் பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, பா.ஜ.க.வின் தொகுதி மறுவரையறை மசோதாவில் அனைத்து மாநிலங்களுக்கும் 50% உயர்வு வழங்குவதால் தி.மு.க. அந்த மசோதாவுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்து இருந்தது. தி.மு.க.வின் இந்த முடிவு குறித்து பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக நடிகர் பிரகாஷ்ராஜ் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியுள்ளதாவது:
"அவசர அவசரமாக திருத்தங்களுடன் பா.ஜ.க. கொண்டுவரும் தொகுதி மறுவரையறை மசோதா ஆபத்தானது. மதம், மொழி, இனம், சிறுபான்மையினருக்கு, இந்த நாட்டின் இறையாண்மைக்கு எதிரானது. இதை எல்லாருக்கும் உணர்த்திய தி.மு.க., இன்று மதவாத சக்திக்குத் துணைபோவது முதுகில் குத்தும் செயல் அல்லவா?
இது சுயநலமான முடிவு. ஒட்டுமொத்த மக்களுக்கும் துரோகம் செய்யும் இந்த முடிவை ஏற்க முடியாது. மாநில உரிமை என்று போராடி, இந்தியாவுக்கே வழிகாட்டிய திமு.க., இப்பொழுது வரலாற்றுப் பிழையான இந்த முடிவை எடுக்கக்கூடாது. இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
இன்று நீங்கள் எடுக்கும் முடிவை அடுத்த தலைமுறையைத் தீர்மானிக்கப் போகிறது. அடுத்த தலைமுறை இந்த முடிவால் உங்களை எப்படிப் பார்க்கும் என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்." என்று கூறியுள்ளார்.