
தமிழகத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர் பதவியை காங்கிரஸுக்கு ஒதுக்க, தவெக முன்வந்துள்ளது. அக்கட்சியின் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்படுவார் எனக் கூறப்படுகிறது.
மேலவையிலிருந்து முன்னாள் அதிமுக அமைச்சர் சி.வி. சண்முகம் ராஜினாமா செய்ததால், மாநிலங்களவைக்கு வேட்பாளரை நியமிக்க த.வெ.க-விற்கு வாய்ப்பு கிடைத்தது. இந்நிலையில் அந்த எம்.பி பதவியை காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், தமிழக முதல்வர் விஜயை சந்தித்து தங்களுக்கு வழங்க ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகின. இதை அடுத்து அப்பதவியை காங்கிரசுக்கு ஒதுக்கீடு செய்தார் விஜய்.
தற்போது விஜய்யின் நெருங்கிய நம்பிக்கைக்குரியவராகக் காங்கிரஸில் கருதப்படும் பிரவீன் சக்ரவர்த்தி அப்பதவிக்கு வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்று தகவல்கள் கூறுகின்றன.