ஸ்டாலின் மேடையில் பிரேமலதா வைத்த குற்றச்சாட்டு!

பிரேமலதா
பிரேமலதா
Published on

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மேடையில் வைத்துக்கொண்டே, தமிழ்நாட்டில் பெண்கள் பாலியல் வன்கொடுமை, போதைப் பிரச்னை நிலவுவதாக தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா குற்றஞ்சாட்டியது அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

சேலத்தில் தி.மு.க. கூட்டணியின் பிரச்சாரக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின், கமல்ஹாசனுடன் பிரேமலதாவும் கலந்துகொண்டார்.

அப்போது பேசிய அவர், அரசாங்கத்தின் பெண்கள் உதவித் திட்டங்களை வரிசையாகப் பட்டியலிட்டார்.

அத்துடன், “தமிழ்நாடு முழுக்க ஒரே ஒரு குற்றச்சாட்டுதான் இருக்கிறது. எங்கு பார்த்தாலும் பாலியல் வன்கொடுமை, போதை கலாச்சாரம்... இதைத் தவிர வேறு என்ன சொல்லமுடியும், இந்த ஆட்சியின்மீது?” என்றதும், கூட்டத்துக்கு வந்திருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்துபோனார்கள்.

ஆனாலும், பிரேமலதா தொடர்ந்து அதே வேகத்தில் பேசினார்.

எல்லா இடங்களிலும் கண்காணிப்பு கேமராக்களையும் பெண்களுக்கான உரிமையையும் முதலமைச்சர் ஸ்டாலின் நிறுவுவார் என்றும் அவருக்கு உறுதுணையாக இருக்கவேண்டும் என்றும் பிரேமலதா பேசினார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com