திரௌபதி முர்மு
திரௌபதி முர்மு

குடியரசுத் தலைவர் சென்னை வருகை: போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு!

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று சென்னை வருகிறார். இதையொட்டி மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பெங்களூருவில் இருந்து விமானம் மூலம் இன்று மாலை 6 மணிக்கு சென்னை வருகிறார். விமான நிலையத்தில் அவரை ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அமைச்சர்கள் வரவேற்கின்றனர்.

பின்னர், கிண்டி ஆளுநர் மாளிகைக்கு காரில் செல்லும் முர்மு, இன்று இரவு அங்கு தங்குகிறார். நாளை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் 8ஆவது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார். பின்னர் பிற்பகல் சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வருகை தர உள்ள நிலையில், அவர் தங்கும் ஆளுநர் மாளிகையில் நேற்று பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், சென்னை விமான நிலையம், கிண்டி ஆளுநர் மாளிகை, பட்டமளிப்பு விழா நடைபெறும் பல்கலைக்கழக வளாகத்தில் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புப் பணியில் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com