”விஜய் பேச்சு, அவரது கொள்கை திராவிட கட்சிகளுடன் ஒத்து போகிறது. இதனால் யாருக்கு பாதிப்பு ஏற்படும் என்பதை எல்லோரும் கணித்துள்ளார்கள்.” என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை லண்டனில் தனது படிப்பை முடித்து இன்று சென்னை திரும்பினார். சென்னை திரும்பிய அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை கூறியதாவது:
"3 மாதம் தமிழக அரசியலில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கிறது. ஒரு பெரிய நடிகர், தனது உச்சத்தில் இருக்க கூடிய இடத்தில் இருந்து, அரசியலில் கால் பதிக்க வேண்டும் என விஜய் வந்து இருக்கிறார். அவரை வரவேற்கின்றோம். காரணம், அவர் வந்து இருக்கும் நோக்கம் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள். வரும் காலத்தில் இது குறித்து பதில் சொல்வோம். மாநாட்டில் அவர் வைத்துள்ள கருத்துக்கள் குறித்து பா.ஜ.க. வினர் பதில் சொல்லி இருக்கிறார்கள்.
உதயநிதி துணை முதல்வர் ஆக பொறுப்பு ஏற்று இருக்கிறார். இது ஒரு வேகமான வளர்ச்சி. பா.ஜ.க எப்போதும் வைக்க கூடிய குற்றச்சாட்டு. தி.மு.க. ஒரு குடும்பத்தை சார்ந்து இருக்கும் கட்சியாக இருக்கிறது. குடும்ப கட்சி உண்மை என்று சொல்லி இருக்கிறார்கள். அதேபோல் உதயநிதியை செயல்பாடு குறித்து நிச்சயம் விமர்சிப்போம். நன்றாக செயல்பட்டால் பாராட்டுவோம். அகில இந்திய அளவில், அரியானாவில் பா.ஜ.க. வெற்றி பெற்று இருக்கிறது. மஹராஷ்டிராவில் சரித்திர வெற்றி பெற்று இருக்கிறது. எல்லா மாநிலத்திலும் பா.ஜ.க. முதன்மையான கட்சியாக இருக்கிறது.
3 மாதங்களில் கோடிக்கணக்கானோர் பா.ஜ.க.வில் உறுப்பினர்களாக இணைந்து உள்ளனர். இந்தியாவில் ஜனநாயக கட்சியாக இருக்க கூடிய ஒரே கட்சி பா.ஜ.க. கிளை தலைவர்கள் முதல் மாநில தலைவர்கள் வரை தொண்டர்களால் தேர்வு செய்யப்படுகிறார்கள். திராவிட கட்சிகள் பேசும் சித்தாந்தத்தை தான் விஜய் பேசுகிறார். புதிதாக வேறு ஏதும் இல்லை.
சீமானின் பாதை வேறு, எங்களுடைய பாதை வேறு. எங்கள் பாதத்தை நாங்கள் வலுவாக பதித்து இருக்கிறோம் அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. விஜய் பேச்சு, அவரது கொள்கை திராவிட கட்சிகளுடன் ஒத்து போகிறது. இதனால் யாருக்கு பாதிப்பு ஏற்படும் என்பதை எல்லோரும் கணித்துள்ளார்கள். புதிதாக வர போகிறவர்களை பார்த்து பா.ஜ.க. எப்போதும் பயப்பட போவது கிடையாது. பெண்கள் முதல் வயதானவர்கள் வரை மனதில் விஜய் இடம் பிடித்து இருக்கிறார். அதனை மறுக்க முடியாது.
இந்திய அளவில் அதிக வசூல் பெறக்கூடிய நடிகராக விஜய் இருக்கிறார். ஆனால் அரசியல் களம் வேறு. அக்டோபர் 28ஆம் தேதிக்கு பிறகு எத்தனை முறை விஜய் வெளியே வந்து இருக்கிறார். எங்களுக்கு யார் மீதும் பயமில்லை. தமிழகத்தில் திராவிட கட்சிகளுக்கு 3 ஆக ஓட்டுக்கள் பிரிந்து இருக்கிறது.
பா.ஜ.க.வின் ஓட்டு தேசிய அளவில் அதிகரித்து கொண்டே இருக்கிறது. புதியவர்களை தடுக்க கூடாது. விஜயை கேள்வி கேட்கும் இடத்தில் கேள்வி கேட்போம். தி.மு.க., ஆம்ஆத்மி வித்தியாசமான முறையில் பயணிக்கிறது. 2026ஆம் ஆண்டு புதிய களமாக இருக்கும். பொறுத்து இருந்து பார்ப்போம். பா.ஜ.க. உறுப்பினர்கள் எண்ணிக்கை 8 மடங்கு அதிகரித்துள்ளது.” இவ்வாறு அண்ணாமலை கூறினார்.