டாஸ்மாக்: நவம்பர் 1 முதல் 'பத்து ரூபாய்' மது விலையில் சேர்ப்பு!

Liquor bottles
காலி மதுபாட்டில்கள்
Published on: 

தமிழகத்தில் காலி மதுபாட்டில்களுக்கான ரூ. 10 கட்டணம், இனி மதுபானங்களின் நிர்ணய விலையுடன் சேர்த்து விற்கப்படும் என்று டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகளில் காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் வழக்கம் உள்ளது. இதற்காக, ரூ.10 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நுகர்வோர் பாட்டில்களை திரும்ப அளிப்பதன் மூலமாக அந்த 10 ரூபாயை பெற்றுக்கொள்ளலாம்.

இந்நிலையில், காலி மதுபாட்டில்களுக்காக வசூலிக்கப்படும் ரூ. 10 கட்டணத்தை, நவம்பர் 1 முதல் மதுபானங்களின் நிர்ணய விலையுடன் சேர்த்து விற்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இதைதொடர்ந்து, அனைத்து வகையான மதுபானங்களின் அதிகபட்ச சில்லறை விலையுடன் சுற்றுச்சூழல், சமூக நலக் கட்டணமாக ரூ.10 சேர்க்கப்படும் என்று டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த அதிகபட்ச சில்லறை விலைக்கு மேல் எந்த வகையான மதுபானங்களையும் விற்பனை செய்யக்கூடாது என்றும், சுற்றுச்சூழல், சமூக நலக் கட்டணம் தொடர்பான அறிவிப்பு பலகையை அனைத்து மதுபானக் கடைகளின் முன்பும் வைக்க வேண்டும் என்றும் டாஸ்மாக் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram