மு.க.ஸ்டாலின் - நரேந்திர மோடி
மு.க.ஸ்டாலின் - நரேந்திர மோடி

தமிழர்கள் மீது பொய்ப் பழி சுமத்தும் பிரதமர் மோடி! – முதல்வர் ஸ்டாலின்

தமிழர்கள் மீது பிரதமர் மோடி பொய்ப்பழி சுமத்துவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் மோடி பேசும் காணொலி ஒன்றை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் மு. க. ஸ்டாலின், ”தமிழ்நாட்டில் தேர்தல் முடிந்ததும், தனது 'தமிழ்ப்பற்றாளர்' வேடத்தை பிரதமர் மோடி! கலைத்துவிட்டதாக” கூறியுள்ளார்.

மேலும், ”ஒடிசாவில் உள்ள புரி ஜெகந்நாதர் கோயிலின் சொத்துகளைக் களவாடும் திருடர்கள் போலத் தமிழர்கள் மீது பொய்ப் பழி சுமத்தியிருக்கிறார்.

வடக்கில் தமிழர்களைக் காழ்ப்புணர்வுடன் தூற்றுவதும், மாநிலங்களுக்கிடையே குரோதத்தைத் தூண்டுவதும் ஒரு பிரதமருக்கு அழகா?

வாக்குகளுக்காக, தான் வகிக்கும் பொறுப்பின் கண்ணியத்தை மறந்து, நாளுக்கு நாள் இவ்வளவு தரக்குறைவாக நடந்துகொள்வதை பிரதமர் நிறுத்திக்கொள்ள வேண்டும்!” என முதலமைச்சர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com