தேனி மாவட்ட சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பியோட்டம்; 9 காவலர்கள் பணியிடை நீக்கம்!

Theni Prison
தேனி சிறை
Published on: 

தேனி மாவட்டம் தேக்கம்பட்டியில் உள்ள சிறையில், காவலர்களை தாக்கிவிட்டு 17 கைதிகள் தப்பியோடினர்.

தேனி மாவட்டம் கண்டமனூர் அருகே இருக்கும் தேக்கம்பட்டியில் உள்ள மாவட்ட சிறையில், 200க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், நேற்று இரவு இந்த சிறையில் பாதுகாப்பிற்கு இருந்த காவலர்களை தாக்கிவிட்டு, அங்கு அடைக்கப்பட்டிருந்த 17 கைதிகள் தப்பியோடினர்.

தப்பியோடியவர்களைப் பிடிக்க 17 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை நான்கு பேரை போலீசார் பிடித்துள்ளனர். இந்த சம்பவத்தில் காயமடைந்த காவலர்கள் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தச் சம்பவத்தை தொடர்ந்து, தேக்கம்பட்டி சிறைக்கு நேரில் சென்று ஆய்வு செய்த சிறைத்துறை டி.ஜி.பி. சந்தீப் ராய் ரத்தோர், கைதிகள் தப்பியோடியபோது சிறையில் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த இருந்த 9 காவலர்களை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவுட்டுள்ளார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram

logo
Andhimazhai
www.andhimazhai.com