தனியார் பேருந்துகள் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு!

Private bus strike postponed
தனியார் பேருந்துகள் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு
Published on: 

தனியார் பேருந்துகள் சங்கம் அறிவித்திருந்த வேலைநிறுத்தத்தை ஒத்திவைப்பதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.

தமிழகத்தில் உள்ள மாநகர, நகரப் பேருந்துகளில் இலவசமாக பயணிக்க மகளிர் விடியல் பயணத் திட்டத்தை முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்தினார்.

இந்தத் திட்டத்தை விரிவுபடுத்த திட்டமிட்ட த.வெ.க. அரசு, எக்ஸ்பிரஸ், எல்.எஸ்.எஸ்., டீலக்ஸ், புறநகர் சாதரணப் பேருந்துகளில் மகளிர் இலவசமாக பயணம் செய்யும் வகையில், வெற்றி பயணம் திட்டத்தை வரும் அக்டோபர் 2 ஆம் தேதி தொடங்கவுள்ளதாக அறிவித்தது.

இந்நிலையில், வெற்றி பயணம் திட்டம் தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையிலும், தனியார் பேருந்து தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையிலும் இருப்பதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் தெரிவித்து வந்தனர்.

எனவே, பேருந்து கட்டணத்தை உயர்த்த வேண்டும், மகளிர் கட்டணமில்லா பயணத்திட்டத்தை தனியார் பேருந்துகளுக்கும் விரிவுபடுத்தி மானியம் வழங்க வேண்டும் உட்பட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் ஒருநாள் கவனஈர்ப்பு வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் கோரிக்கைகளை பரிசீலிப்பதாக வருவாய், போக்குவரத்துத் துறைகளின் அமைச்சர்கள் உறுதி அளித்ததைத் தொடர்ந்து, இன்று நள்ளிரவு முதல் நாளை நள்ளிரவு வரை அறிவித்திருந்த ஒருநாள் கவன ஈர்ப்பு வேலைநிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram

logo
Andhimazhai
www.andhimazhai.com