மதுராந்தகத்தில் வாக்குமையத்தில் தகராறு- சீல் இல்லையென பிரச்னை!

By-election voting status
இடைத்தேர்தல் வாக்குப்பதிவு
Published on: 

மதுராந்தகம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை மும்முரமாக நடைபெற்றுவருகிறது. 

இதில், சிறிது நேரத்திற்கு முன்னர் ஒன்பதாவது சுற்று வாக்கு எண்ணிக்கையின்போது பிரச்னை எழுந்தது. அ.தி.மு.க. முகவர் தரப்பில் இயந்திரம் சீலிடப்படவில்லை எனப் பிரச்னையைக் கிளப்பினர். 

தகவல் அறிந்து காவல்துறை அதிகாரிகள் விரைந்து வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஒருவாறாக சமாதானம் அடைந்தனர். 

ஆனால், மீண்டும் 11ஆவது சுற்றில் சிக்கல் ஏற்பட்டது. 

தி.மு.க., கம்யூனிஸ்ட் கட்சிகள் தரப்பில் தங்கள் ஆட்சேபத்தைத் தெரிவித்தனர். 

தகவலறிந்து மாவட்ட ஆட்சியர் வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு விரைந்துவந்தார்.   

logo
Andhimazhai
www.andhimazhai.com