மோடி வருகைக்கு எதிர்ப்பு
மோடி வருகைக்கு எதிர்ப்பு

தமிழர்களை இழிவுபடுத்திவிட்டு தமிழகத்துக்கு வருவதா?- மோடியின் வருகைக்கு எதிராகப் போராட்டம்!

தமிழர்களை இழிவுசெய்துவிட்டு தமிழகத்துக்கு வருவதா என பிரதமர் மோடி, மைய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைக் கண்டித்து போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஜூன் முதல் நாளன்று கடைசிக் கட்ட மக்களவைத் தேர்தல் நடைபெறும்நிலையில், பிரதமர் நரேந்திரமோடி கன்னியாகுமரியில் வந்து தியானம் செய்வதாக அறிவித்துள்ளார். அதாவது, பிரச்சாரம் நாளை முடிவடைந்த பிறகு அவர் கன்னியாகுமரி கடல் பாறையில் அமர்ந்து தியானம் செய்யவுள்ளார். 

இதற்காக, அவர் தியானம் செய்யும் இடத்தில் பொருத்துவதற்காக புதிய குளுமை சாதனங்கள் கொண்டுவந்து இறக்கப்பட்டன. கன்னியாகுமரி முழுவதும் சல்லடை போடுவதைப்போல தமிழக காவல் துறையினர் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். அவருக்கான சிறப்பு ஏற்பாடுகளை தமிழக அரசின் பல்வேறு துறைகள் மேற்கொண்டுவருகின்றன.  

இந்த நிலையில், தமிழர்களை இழிவுசெய்த மோடி தமிழகத்துக்கு வருவதா என பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கோவை இராமகிருஷ்ணன் தலைமையில் அனைத்துக் கட்சியினர் சார்பில் மதுரை, பெரியார் பேருந்து நிலையம் அருகில் நாளை மாலை 4 மணிக்கு போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.   

logo
Andhimazhai
www.andhimazhai.com