58 படகுகளுடன் 425 மீனவர்கள் கைது... இராமேசுவரத்தில் போராட்டம்!

rameswaram fishermen
இராமேசுவர மீனவர்கள்
Published on: 

கடந்த ஜூன் மாதம் முதல் இதுவரை தமிழ்நாட்டைச் சேர்ந்த 425 மீனவர்கள் அவர்கள் மீன்பிடிக்கப் பயன்படுத்திய 58 படகுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்னும் நூறு பேர் இலங்கையிலேயே சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று 16 மீனவர்கள் கைதுசெய்யப்பட்டது மீண்டும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கைதான மீனவர்களை விடுவிக்கக்கோரி இராமேசுவரத்தில் இன்று அதிகாலை முதல் இருநூறுக்கும் மேற்பட்டவர்கள் மறியலில் ஈடுபட்டனர். 

இலங்கை அரசைக் கண்டித்தும் மத்திய, மாநில அரசுகளுக்குக் கோரிக்கைவைத்தும் அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். 

மீனவர்களின் குடும்பத்தினர் கொந்தளிப்புடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், அசம்பாவிதம் ஏதும் நிகழ்ந்துவிடாமல் தடுக்க காவல்துறையினர் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். 

முன்னதாக, நேற்று புதன்கிழமை இராமேசுவரத்திலிருந்து 399 படகுகளில் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர். அதில் இராமபாண்டியன், கோகிலா ஆகியோருக்குச் சொந்தமான படகுகளில் சென்ற மீனவர்களை இலங்கைப் படையினர் சுற்றிவளைத்து கைதுசெய்தனர். 

காங்கேசன்துறை கடற்படை முகாமுக்குக் கொண்டுசெல்லப்பட்ட தமிழக மீனவர்கள் 16 பேரும் பின்னர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர்.  

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram

logo
Andhimazhai
www.andhimazhai.com