தில்லியில் கைதுகள்- தமிழகத்தில் போராட்டத்துக்கு அழைப்பு!

தில்லியில் போராட்டக்காரர்கள் கைது
தில்லியில் போராட்டக்காரர்கள் கைது
Published on: 

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரைப் பதவி நீக்கம் செய்யக் கோரி இன்று காலையில் புதுதில்லியில் நடைபெற்ற போராட்டத்தில் இடதுசாரிக் கட்சிகளின் தலைவர்கள் உட்பட பல்வேறு தலைவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்; இதைக் கண்டித்து தமிழகத்தில் போராட்டங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  

”கரப்பான் பூச்சி ஜனதா பார்ட்டி சார்பில் ஜந்தர் மந்தரில் போராட்டத்திற்கு அறைகூவல் விடுக்கப்பட்டிருந்தது. இப்போராட்டத்திற்கு நாம் உட்பட பல கட்சிகள், மாணவர், இளைஞர் அமைப்புகள் ஆதரவு தெரிவித்திருந்தன. இந்நிலையில் ஒன்றிய அரசின் டில்லி போலீசார் மற்றும் துணை ராணுவப் படையினர் மூலம் கடுமையான அடக்குமுறைகளை கட்டவிழ்த்துவிட்டுள்ளது. மாணவர்கள், போராட்டக்காரர்களை ஒன்று சேர விடாமல் ஆங்காங்கே கைது செய்துள்ளது. கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்கள் துணை ராணுவப் படையாலும், ஒன்றிய அரசின் காவல்துறையினாலும் முற்றுகையிடப்பட்டுள்ளது.

இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ளச் சென்ற கட்சியின் அகில இந்தியப் பொதுச்செயலாளர் தோழர் எம்.ஏ. பேபி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் டி. ராஜா, சி.பி.ஐ. (எம்.எல்) தோழர்கள், கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பினராயி விஜயன், உ. வாசுகி, மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், மத்தியக் குழு உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ் எம்.பி. உட்பட பலரை தில்லி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட தோழர்களை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வாகனத்தில் வைத்துக்கொண்டே சுற்றி வருகிறார்கள்.

இந்தக் கைதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் ஆங்காங்கே மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் போராட்டம் நடைபெறும்.” என்று அக்கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகத்தின் பெயரிலான அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

logo
Andhimazhai
www.andhimazhai.com