கமலுக்கு வாழ்த்துச் சொன்னது குத்தமாய்யா?

கமலுக்கு வாழ்த்துச் சொன்னது குத்தமாய்யா?
Published on: 

நடிகரும் அரசியல் தலைவருமான கமல் ஹாசனின் பிறந்த நாளான நேற்று திருமாவளவனும் இடதுசாரித் தலைவர்களும் சண்டியர் திரைப்படப் படப்பிடிப்புக்குச் சென்று நேரில் வாழ்த்துத் தெரிவித்தார்கள். 

சண்டியர் திரைப்படத் தலைப்புக்கு புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி உட்பட பல தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

இந்த நிலையில், இந்தச் சந்திப்பும் அதிருப்திக்கு உள்ளாகியது. 

இந்நிலையில், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் இதுகுறித்து விளக்கம் ஒன்றை வெளியிட்டுள்ளார். 

”கலைஞானி கமலஹாசன் அவர்களுக்கு பிறந்தநாள். அவர் படப்பிடிப்பில் இருப்பதால் வாழ்த்துக்கள் தெரிவிக்க அங்கு வருமாறு கேட்டுக் கொண்டனர். நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தோம். தற்போது சர்ச்சையாக்கப்பட்டுள்ள படத்தின் பெயர் குறித்து இணைத்து பேசுவது பொருத்தம் அல்ல.” என்று அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.