அமெரிக்காவின் 'ஜி.பி.எஸ்.' என்ற வழிகாட்டும் அமைப்பைப் போலவே, இந்தியாவின் உள்நாட்டுச் செயற்கைக்கோள் வழிகாட்டியான 'நேவிக்' அமைப்பு, நமது இருப்பிடத்தையும் நேரத்தையும் துல்லியமாகக் கண்டறிய உதவுகிறது.
இந்த 'நேவிக்' அமைப்பின் செயல்திறனை மேம்படுத்தவும், பேரிடர்களைத் துல்லியமாகக் கணிக்கவும் 2,250 கிலோ எடை கொண்ட 'என்.வி.எஸ். - 03' என்ற அதிநவீன செயற்கைக்கோளை இஸ்ரோ விஞ்ஞானிகள் தயாரித்துள்ளனர்.
இந்தச் செயற்கைக்கோளை 'ஜி.எஸ்.எல்.வி.எப். - 18' ஏவுகலன் சுமந்துசென்றது. ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து இன்று 108ஆவது ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ளது.
இந்த ஏவுகணையில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஸ்மார்ட் போன்கள், ஸ்மார்ட் வாட்சுகள், பிட்னஸ் டிராக்கர்களில் உள்ள சிப்செட்களுடன் பொருந்தும் சிக்னல் தொழில்நுட்பத்தை இது சுமந்துசெல்கிறது.
இதுபோல, வான்வெளியில் விமானங்கள் பாதுகாப்பாகச் செயல்படவும், பேரிடர் காலங்களில் அவசரகால முன்னெச்சரிக்கைகளை வழங்குவதற்கும் இது உதவும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.