சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பின்னர் சிறிது காலம் ஓய்வு தேவைப்படுவதாக அறிவித்தார், முன்னாள் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன். இந்த நிலையில் மதுரையில் நடைபெற்ற கட்சியின் மாநகர் மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டத்தில் அவர் பேசினார்.
அப்போது, “வெற்றியை விடத் தோல்விதான் சிறந்த பாடங்களையும் அனுபவங்களையும் கற்றுத் தருகிறது. நமது இயக்கம் நிரந்தரமானது, நமது தத்துவம் - கொள்கை நிரந்தரமானது. ஆனால் செயல்முறைகளை நாம் மாற்றத்திற்கு உட்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். இது ஆட்சி மற்றும் கட்சி நிர்வாகம் இரண்டிற்கும் பொருந்தும்.” என்று பிடிஆர் குறிப்பிட்டார்.
மதுரை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் கோ. தளபதி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், அவைத்தலைவர் ஒச்சுபாலு, முன்னாள் அமைச்சர் பொன். முத்துராமலிங்கம், வேலுச்சாமி, குழந்தைவேலு, ஜெயராமன் ஆகியோர் உட்பட நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொண்டனர்.