தீவிர அரசியலிலிருந்து பிடிஆர் ஓய்வு!

தீவிர அரசியலிலிருந்து பிடிஆர் ஓய்வு!
Published on

தீவிர அரசியலிலிருந்து சிறிது காலம் ஓய்வெடுக்கப் போவதாக முன்னாள் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார். 

பத்து ஆண்டுகள் சட்டப்பேரவை உறுப்பினராகத் தீவிரமாக இயங்கிவந்த தனக்கு சில வாரங்கள் ஓய்வு தேவைப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். 

இதுகுறித்து அவர் இன்று சமூக ஊடகங்களில் நீண்ட விளக்கத்தை வெளியிட்டுள்ளார். 

தன் அன்றாட வாழ்க்கை முறையைச் சீரமைக்கவும், எழுத்துப் பணிகளில் ஈடுபடவும் இந்தக் காலம் பயன்படும் என்றும் அவர் கூறியுள்ளார். 

logo
Andhimazhai
www.andhimazhai.com