தமிழகத்தில் 2027ஆம் ஆண்டிற்கான பத்தாம் , பன்னிரண்டாம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணைகள் வெளியிடப்பட்டுள்ளன.
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு வரும் 2027ஆம் ஆண்டு, மார்ச் 17 முதல் ஏப்ரல் 12ஆம் தேதிவரையில் நடைபெறும்.
பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு வரும் 2027ஆம் ஆண்டு, மார்ச் 3 முதல் 29ஆம் தேதிவரையில் நடைபெறுகிறது.
பிளஸ் - 2 முடிவு மே 7ஆம் தேதியும் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு மே 20ஆம் தேதியும் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு தேர்வு அட்டவணை:
1) 17.03.2027 - தமிழ்
2) 25.03.2027 - ஆங்கிலம்
3) 31.03.2027 - கணிதம்
4) 05.04.2027 - அறிவியல்
5) 09.04.2027 - சமூக அறிவியல்
6) 12.04.2027 - விருப்பப் பாடம்
+2 தேர்வு அட்டவணை:
1) 03.03.2027 - தமிழ்
2) 09.03.2027 - ஆங்கிலம்
3) 12.03.2027 - வேதியியல், கணக்குப் பதிவியல், புவியியல்
4) 15.03.2027 - கணினி அறிவியல், கணினிப் பயன்பாடு, உயிர் வேதியியல், அரசியல் அறிவியல், புள்ளியியல்
5) 19.03.2027 - உயிரியல், வரலாறு, வணிக கணிதம்
5) 23.03.2027 - இயற்பியல், பொருளியல்
6) 29.03.2027 - கணிதம், விலங்கியல், வணிகவியல், நுண்ணுயிரியல், ஊட்டச்சத்து, உணவுமுறை, வேளாண் அறிவியல், நர்சிங் (பொது), உணவுச் சேவை மேலாண்மை.