அக்.3 வெள்ளிக்கிழமை பொது விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு!

Tamilnadu government secretariat
தலைமைச் செயலகம்
Published on

ஆயுத பூஜை தொடர் விடுமுறை முன்னிட்டு அக்.3ஆம் தேதி வெள்ளிக்கிழமையை விடுமுறை தினமாக தமிழக அரசு அறிவித்தது.

அக்டோபர் 1ஆம் தேதி நாளை ஆயுத பூஜை விடுமுறையாகவும், அக்டோபர் 2ஆம் தேதி விஜய தசமி, அரசு விடுமுறையாகவும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை தினங்கள் நாளை புதன் மற்றும் நாளை மறுநாள் வியாழக்கிழமை வருகின்றன. இதனால் வரும் அக்டோபர் 3ஆம் தேதி வெள்ளிக்கிழமை மட்டும் வேலை நாளாக இருந்தது.

அக்டோபர் 4,5ஆம் தேதிகளில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என தொடர்ந்து விடுமுறை நாட்களாக உள்ளன. இதனால், அக்டோபர் 3ஆம் தேதி ஒருநாளை மட்டும் விடுமுறையாக அரசு அறிவித்தால் 5 நாட்கள் தொடர்ந்து விடுமுறை கிடைக்கும் சூழ்நிலை நிலவியது. தசரா பண்டிகையை அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மகிழ்வுடன் கொண்டாடுவர்கள் என்று அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்நிலையில், அக்.3ஆம் தேதி வெள்ளிக்கிழமையை விடுமுறை தினமாக தமிழக அரசு அறிவித்தது. இதனால் அரசு பணியில் இருப்பவர்களுக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறை கிடைத்துள்ளது. பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு ஏற்கனவே இந்நாட்கள் தசரா விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

logo
Andhimazhai
www.andhimazhai.com