2026ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாள்கள்: தமிழக அரசு அறிவிப்பு!

Tamilnadu government secretariat
தலைமைச் செயலகம்
Published on

2026ஆம் ஆண்டுக்கான அரசு விடுமுறை நாள்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தலைமைச்செயலர் முருகானந்தம் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி 2026ஆம் ஆண்டில் 24 நாள்கள் பொது விடுமுறை நாள்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவை அரசு துறைகள், அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு பொருந்தும் என்றும், சில விடுமுறைகள் வணிக வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளுக்கே தனிப்பட்டவையாக பொருந்தும் எனவும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

பொது விடுமுறை பட்டியல்

* ஆங்கில புத்தாண்டு- ஜன.01 (வியாழன்)

*பொங்கல் - ஜன.15 (வியாழன்)

* திருவள்ளுவர் நாள்- ஜன.16 (வெள்ளி)

* உழவர் திருநாள்- ஜன.17 (சனி)

* குடியரசு நாள் - ஜன.26 (திங்கள்)

* தைப்பூசம்- பிப்.01 (ஞாயிறு)

*தெலுங்கு வருட பிறப்பு - மார்ச் 19 ( வியாழன்)

*ரம்ஜான் - மார்ச் 21 (சனி)

*மகாவீரர் ஜெயந்தி - மார்ச் 31 (செவ்வாய்)

*வங்கிகள் ஆண்டு கணக்கு - ஏப்.01 (புதன்)

*புனித வெள்ளி - ஏப்.03 (வெள்ளி)

*தமிழ்புத்தாண்டு - ஏப்.14 (செவ்வாய்)

*மே நாள் - மே 01(வெள்ளி)

*பக்ரீத் - மே 28 (வியாழன்)

*மொகரம் - ஜூன் 26 (வெள்ளி)

*சுதந்திர தினம் - ஆக.15 (சனி)

*மிலாதுநபி - ஆக.26 (புதன்)

*கிருஷ்ண ஜெயந்தி - செப்.04 (வெள்ளி)

*விநாயகர் சதுர்த்தி - செப்.14 (திங்கள்)

*காந்தி ஜெயந்தி - அக்.02 (வெள்ளி)

*ஆயுத பூஜை - அக்.19 (திங்கள்)

*விஜயதசமி - அக்.20 (செவ்வாய்)

*தீபாவளி - நவ.08 (ஞாயிற்றுக்கிமை)

*கிருஸ்துமஸ் - டிச.25 (வெள்ளி)

தைப்பூசம் மற்றும் தீபாவளி பண்டிகைகள் ஞாயிற்றுக்கிழமைகளில் வருகின்றன.

logo
Andhimazhai
www.andhimazhai.com