அமைச்சர் மரிய வில்சனுக்கு நீதிமன்றம் உத்தரவு!

minister marie wilson
அமைச்சர் மரிய வில்சன்
Published on

நிதியமைச்சர் மரிய வில்சனின் சகோதரர் புதுச்சேரியில் லாஸ்பேட்டை பகுதியில் வசித்து வருகிறார். அங்கு சென்று மரிய வில்சன் தன் சகோதரர், அவரின் மனைவி இருவரையும் தாக்கினார் என்று அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. அது தொடர்பான காணொலிக் காட்சிகள் இணையத்தில் பரவியுள்ளன.

இந்த விவகாரம் தொடர்பாக, மரியவில்சன் மீது அம்மாநிலத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளது.

அந்த வழக்கில், நீதிமன்றத்தில் இன்று ஆஜராகும்படி மரிய வில்சனுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால், அதன்படி அவர் இன்று விசாரணையில் ஆஜராகவில்லை.

இதனால், வரும் 10ஆம் தேதி நேரில் ஆஜராகும்படி அவருக்கு புதுச்சேரி நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. 

logo
Andhimazhai
www.andhimazhai.com