ஆர். எம். வீரப்பன்
ஆர். எம். வீரப்பன்

ஆர். எம். வீரப்பன் மறைக்கு முதல்வர் உட்பட அரசியல் தலைவர்கள் இரங்கல்!

முன்னாள் அமைச்சர் ஆர்.எம். வீரப்பன் மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கள் தெரிவித்துள்ளனர்.

மூச்சு திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஆர்.எம். வீரப்பன் இன்று பிற்பகல் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து, சென்னை தி.நகரில் உள்ள அவரின் இலத்தில் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நாளை மாலை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மின் மயானத்தில் அவரின் உடல் தகனம் செய்யப்பட உள்ளது.

இந்நிலையில், அவரின் மறைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

திராவிட இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவரும், எம்ஜிஆர் கழகத்தின் நிறுவனருமான திரு. ஆர்.எம். வீரப்பன் அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து மிகவும் அதிர்ச்சியும், வருத்தமும் அடைந்தேன்.

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். முத்தமிழறிஞர் கலைஞர் என அனைத்து தலைவர்களுடனும் நெருக்கமும், நட்பும் கொண்டிருந்தவர். எம்.ஜி.ஆரின் மனச்சாட்சியாகவும், நிழலாகவும் கருதப்பட்ட ஆளுமையாக அரசியலில் வலம் வந்தவர். அவரது அமைச்சரவையில் இடம்பெற்று செய்தி மக்கள் தொடர்புத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு அமைச்சராகவும் பணியாற்றிப் புகழ் பெற்றவர்.

அரசியல், திரைத்துறை, தமிழ்த்துறை, ஆன்மீகம் என்று அனைத்துத் துறைகளிலும் சாதனை படைத்த திரு. ஆர்.எம்.வீரப்பன் அவர்கள், அரசியல் வேறுபாடுகளைக் கடந்து அனைத்துத் தரப்பினராலும் விரும்பப்படும் பேராளுமையாகத் திகழ்ந்தார்.

அவரை இழந்து வாடும் அவரது துணைவியார், குடும்பத்தினர் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். திராவிட இயக்கம் இருக்கும் வரை திரு. ஆர்.எம்.வீரப்பன் அவர்களின் புகழும் நிலைத்திருக்கும்!

அண்ணாமலை -தமிழக பாஜக தலைவர்

தமிழக முன்னாள் அமைச்சரும், மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவருமான ஆர்.எம். வீரப்பன் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன். அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்க.

டிடிவி தினகரன் – அமமுக பொதுச்செயலாளர்

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், இதய தெய்வம் அம்மா அவர்களின் நம்பிக்கைக்குரிய தலைவராக இருந்தவரும், எம்.ஜி.ஆர் கழகத் தலைவருமான மூத்த அரசியல்வாதி ஆர்.எம்.வீரப்பன் உடல்நலக்குறைவால் உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது.

நாடகத்துறையில் இருந்து அரசியலுக்கு வந்து துணிவு, கடின உழைப்பு, விடாமுயற்சிக்கு எடுத்துக் காட்டாக திகழ்ந்து உச்சம் தொட்ட ஆர்.எம்.வீரப்பன் அவர்களை இழந்துவாடும் எம்.ஜி.ஆர் கழகத்தினருக்கும், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com