தமிழ் நாடு
ஆட்சி அதிகாரத்தில் பங்கு குறித்து காங்கிரஸ் கட்சியில் ராகுல் காந்தியும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் பேசி முடிவு செய்வார்கள் என திக தலைவர் கி. வீரமணி கூறியுள்ளார்.
ஆட்சி, அதிகாரத்தில் பங்கு தொடர்பான விவாதம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த திராவிடர் கழகத்தலைவர் வீரமணியிடம், ஆட்சி – அதிகாரத்தில் பங்கு தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், “அதை முடிவு செய்ய வேண்டியவர்கள் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராகுல் காந்தியும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் தான். வழக்கம் போல் திமுக – காங்கிரஸ் கூட்டணி பலம் பெறும். சந்து பொந்துகள் அடைக்கப்படும். 2026இல் திமுக கூட்டணி ஆட்சி மீண்டும் அமையும்.