ஊழல் வழக்கு- கே.என்.நேரு இடங்களில் மீண்டும் ரெய்டு!

கே.என். நேரு வீட்டில் தேடுதல் சோதனை
கே.என். நேரு வீட்டில் தேடுதல் சோதனை
Published on: 

பணி நியமனத்துக்கு இலஞ்சம் பெற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் கே.என். நேரு மீது வழக்குப் பதிந்து விசாரிக்க நீதிமன்றம் தடைவிதிக்க மறுத்துவிட்டது. அதையடுத்து, திருச்சி தில்லை நகரில் உள்ள நேருவின் வீட்டில் இன்று காலைமுதல் ஊழல் தடுப்புத் துறை போலீசார் தேடுதல் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

மூன்று வாகனங்களில் வந்த 15-க்கும் மேற்பட்ட போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

நேருவின் தம்பி ரவிச்சந்திரன் மகனுக்கு வரும் 16ஆம் தேதி அன்று திருமணம் நடைபெற உள்ள நிலையில் இந்தச் சோதனை, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோவையிலும் நேரு தொடர்புடைய 2 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் தேடுதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

சிங்காநல்லூர் அருகே கே.என்.நேருவின் சகோதரருக்குச் சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு, ஜி.வி.ரெசிடென்சி பகுதியில் உள்ள அலுவலகம் ஆகிய இடங்களிலும் தேடுதல் நடத்தப்பட்டு வருகிறது.  

logo
Andhimazhai
www.andhimazhai.com