ஜூன் 11வரை மழை- வானிலை மையம் தகவல்

கனமழை பகுதிகள் - சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள வரைபடம்
கனமழை பகுதிகள் - சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள வரைபடம்
Published on

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளதாகவும், புதுவை, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை :

"தமிழகத்தில் விருதுநகர், மதுரை, சிவகங்கை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ஈரோடு, சேலம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், விழுப்புரம், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

கன்னியாகுமரி, நீலகிரி, கோவை மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தேனி,திண்டுக்கல், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இடி,மின்னல், பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யும்.

ஜுன் 11 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

இன்று முதல் ஜுன் 9 வரை தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்." என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com