தமிழ் நாடு

சென்னை முழுவதும் இன்று பிற்பகல் நல்ல மழை பொழிந்தது.
சென்னையில், இன்று காலையில் சற்று மிதமான மழை பெய்தது. அதனைத் தொடர்ந்து, வானிலை சற்று மாறி சிறிது நேரம் வெயில் வந்தது.
ஆனால், சில மணி நேரத்திலேயே வானம் நல்ல மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
பிற்பகல்வாக்கில் நகர் முழுவதும் பரவலாக மழை பெய்யத் தொடங்கியது.
தமிழகத்தில் இன்றுமுதல் வரும் வெள்ளிக்கிழமைவரை ஆங்காங்கே குளிர்ந்த காற்றுடன் கூடிய மிதமான முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது.
இந்நிலையில், சென்னை முழுவதும் பரவலாகக் கொட்டித் தீர்த்த மழை, தொடர்ச்சியான குளிர்மையை உருவாக்கியுள்ளது.