நெல்லையில் மழை
நெல்லையில் மழைநன்றி: கதிரவ வேல்

அடுத்த 3 நாள்களுக்கு தமிழகத்துக்கு நல்ல மழை! - வானிலை மையம்

தமிழ்நாட்டில் அடுத்த மூன்று நாள்களுக்கு 14 மாவட்டங்களில் மழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்திருக்கிறது.

மாநிலத்தில் கோடை காலம் முடிவடைந்தபோதும் அதன் தாக்கம் நீடித்துவருகிறது. கடந்த ஒரு வாரமாக ஆங்காங்கே பல மாவட்டங்களில் சிறிதளவு மழை பெய்து வந்தாலும் வெயிலின் தாக்கம் குறையவில்லை.

இரண்டு நாள்களாக சில மாவட்டங்களில் மழை பெய்துவருகிறது. இந்நிலையில் வளிமண்டலத்தில் தமிழகப் பகுதிகளின் மேல் நிலவும், கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக இன்று புதன்கிழமை முதல் மூன்று நாள்களுக்கு மழைக்கு வாய்ப்பு உண்டு என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன்படி, தமிழ்நாடு புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழையும் கோவை, நீலகிரி, கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, அரியலூர், புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல், தேனி, மதுரை, தென்காசி ஆகிய ஒன்பது மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும்,

நாளை வியாழனன்று கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரியில் ஓரிரு இடங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு உண்டு என்றும்,

நாளைமறுநாள் வெள்ளியன்று கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு மாவட்டங்களிலும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களிலும் கன மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com