மழை
மழைநன்றி: கதிரவ வேல்

கொளுத்தும் வெயிலுக்கு இதம்... 19 மாவட்டங்களில் மழை பெய்யும்!

தமிழ்நாடு முழுவதும் கோடை வெயில் கொளுத்தி எடுத்துக்கொண்டிருக்கும் நிலையில், மனதுக்கு இதமான செய்தியாக, 19 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

திருவாரூர், தஞ்சாவூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, இராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இடிமின்னலுடன் 30-40 கிமீ வேகத்தில் காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும். 

தேனி, கரூர், விழுப்புரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், காரைக்கால்ஆகிய பகுதிகளில் இலேசானது முதல் மிதமானதுவரை மழை பெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com