rain
மழை

அடுத்த 3 மணி நேரத்தில் 31 மாவட்டங்களில் மழை!

Published on

அடுத்த 3 மணி நேரத்தில் 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

லட்சத்தீவு, கேரளா மற்றும் வடதமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, தென்காசி, திருநெல்வேலி, சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com