தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநராக ராஜேந்திர அர்லேக்கர் பதவியேற்பு!

தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநராக ராஜேந்திர அர்லேக்கர் பதவியேற்பு!
Published on: 

தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநராக கேரள ஆளுநர் ராஜேந்திர அர்லேக்கர் இன்று பதவியேற்றுக் கொண்டார்.

தமிழ்நாட்டின் ஆளுநராக இருந்து வந்த ஆர்.என். ரவி சட்டப்பேரவையில் நிறைவேற்றும் தீர்மானத்துக்கு அனுமதி அளிக்காமல் இருப்பது, ஆளுநர் உரையை வாசிக்காமல் வெளிநடப்பு செய்வது என அவர் ஒரு அரசியல் செய்து வந்தார். அவரின் செயல்பாடு அவ்வப்போது விமர்சனத்துக்குள்ளானது.

இந்த நிலையில், ஆளுநர் ஆர்.என். ரவி கடந்த வாரம் மேற்குவங்க ஆளுநராக மாற்றப்பட்ட நிலையில், கேரள ஆளுநராக இருந்த ஆர்.வி. அர்லேக்கர், தமிழக மாநில ஆளுநர் பொறுப்பை கூடுதலாக கவனிப்பார் என்றும் குடியரசுத் தலைவர் மாளிகை அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

அதன்படி, தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநராக கேரள ஆளுநர் ராஜேந்திர அர்லேக்கர் இன்று ஆளுநர் மாளிகையில் பதவியேற்றுக் கொண்டார். உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com