
காங்கிரஸ் கட்சி குறித்து எதுவும் தெரியாதவர் ராஜேந்திர பாலாஜி. அவரது தனது கருத்தை திரும்பப் பெற வேண்டும் என தமிழ்நாட்டு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்
விருதுநகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, காங்கிரஸ் கட்சியை கலைத்து விடுங்கள். காங்கிரஸ் கட்சி நாட்டுக்கும் தேவையில்லை, ஊருக்கும் தேவையில்லை. காங்கிரஸ் கட்சி பயங்கரவாதத்திற்கும், பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக செயல்படுகிறது என்று கூறி இருந்தார்.
இந்நிலையில் சென்னை அம்பத்தூரில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அரசியல் நாகரிகம் இல்லாதவர். காங்கிரஸ் கட்சியை கலைத்துவிடலாம் என்று பேசிய ராஜேந்திர பாலாஜிக்கு நாவடக்கம் வேண்டும். . நாங்கள் பேச ஆரம்பித்தால் நீங்கள் தாங்கமாட்டீர்கள். அவரின் பேச்சை எடப்பாடி பழனிசாமி கண்டித்திருக்க வேண்டாம்? அதிமுகவுக்க என்ன வரலாறு இருக்கிறது
கடந்த 1996ஆம் ஆண்டில் அதிமுக எத்தனை இடங்களில் வெற்றி பெற்றது. எங்களது சொந்த தந்தையை தான் டாடி என அழைப்போம். ஆனால் அதிமுகவினர் யாரையோ டாடி என்கின்றனர்.
காங்கிரஸ் கட்சி குறித்தும் ராகுல் காந்தி குறித்தும் ராஜேந்திர பாலாஜி பேசியது கண்டிக்கத்தக்கது. குறைந்தபட்சம் தலைமைப் பண்பு இல்லாதவர் மாவட்டச் செயலாளராக, அமைச்சராக இருந்தால் என்ன செய்வது. காங்கிரஸ் பேரியக்கத்தின் வரலாறு தெரியாதவர் ராஜேந்திர பாலாஜி. அவர் தனது கருத்தை திரும்பப் பெற வேண்டும்.” என்றார்.