புழுக்கம் ஜாஸ்தியாயிடுச்சி… இமயமலைக்குக் கிளம்புகிறார் ரஜினி!

புழுக்கம் ஜாஸ்தியாயிடுச்சி… இமயமலைக்குக் கிளம்புகிறார் ரஜினி!
Published on: 

தலைப்பைப் படித்து ரஜினி ரசிகர்கள் டென்சன் ஆகவேண்டாம். சென்னையில் வெப்பம் தகிப்பதால் புழுக்கம் அதிகமானதை ஒட்டி ரஜினி இமயமலைக்குக் கிளம்புகிறார் என்றே படித்துக்கொள்ளவும்.

தேர்தல் முடிவுகள் வெளியாகத் தொடங்கியதிலிருந்தே ரஜினி டென்சனாரோ இல்லையோ அவரது ரசிகர்களும் நலம் விரும்பிகளும் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி, ‘அய்யோ நம்ம தலைவர் அரசியலுக்கு வந்திருந்தா ? ‘ என்று அடைந்த ஆதங்கத்திற்கு அளவே இல்லை. இந்த ஆதங்கத்தைக் கூடுமானவரை ரஜினிக்குக் கடத்தவுமே செய்தனர்.

மரம் அமைதியை விரும்பினாலும் காற்று அதை கொஞ்சம் ஆட்டித்தான் பார்க்கிறது என்கிற அடிப்படையில் விஜய்க்கு போதிய ஆதரவு இல்லாதிருந்த இடைப்பட்ட இரு தினங்களில் அவருக்கு எதிராக ரஜினியும் களம் இறக்கப்பட்ட செய்திகளும் மெல்ல கசியவே செய்தன.

குறிப்பாக, இக்கட்டான நேரம் ஒன்றில் அவர் முன்னாள் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து எடப்பாடியை முதல்வராக்க முயன்ற செய்தி லீக் ஆகும் என்பதை ரஜினியே எதிர்பார்க்கவில்லை. சிம்பிளாகச் சொன்னால் அசிங்கப்பட்டான் ஆட்டோக்காரன் கதையேதான்.

தற்போது தேவைக்கும் அதிகமான மெஜாரிட்டியுடன் விஜய் ஆட்சி அமைத்திருப்பதோடு மட்டுமின்றி, எதிர்க்கட்சி தலைவர்களை அவர்களது இல்லத்துக்கே சென்று சந்தித்தது. கோவில், பள்ளி அருகே இருந்த 717 மதுக்கடைகளை இழுத்து மூடச் சொன்னது என்று அடுத்தடுத்து சிக்ஸர்களாக விஜய் விளாசிக்கொண்டிருக்கும் நிலையில், எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்த விஜய் கலை உலகின் மூத்தவர்களான கமலையும் ரஜினியையும் சந்தித்திருக்க வேண்டாமா என்கிற ஆதங்கப்பதிவுகள் அலையடிக்கத் தொடங்கியுள்ளன.

இது தொடர்பாக விஜய் வட்டாரத்தில் விசாரித்தபோது குறிப்பிட்ட ஒரு சந்தர்ப்பத்தில் விஜய் நிச்சயம் கமலை அவரது இல்லம் சென்று விஜய் நிச்சயம் சந்திப்பார். ஆனால் நெவர் ரஜினி. விஜய்க்கு எதிரான அவரது பழைய செயல்பாடுகளைக் கூட மறந்துவிடலாம். ஆனால் எடப்பாடியை முதல்வராக்க அவர் முயன்றதை விஜய் அவ்வளவு லேசில் மறக்கத் தயாராக இல்லை. பகை பகைதான் என்கிறார்கள்.

இத்தகவல் ரஜினி காதுவரை வந்துசேர அவர் மிகுந்த மனப்புழுக்கத்துக்கு ஆளாகியிருக்கிறார் என்கிறார்கள். இன்னொரு பக்கம் ரஜினி, கமல் நடிக்கும் ரெட் ஜெயன்ட் நிறுவனத்தயாரிப்பும் தாமதமாகும் நிலை. இந்நிலையில் சென்னையில் இருப்பது மனதுக்கும் உடலுக்கும் நல்லதல்ல என்று முடிவு செய்து தனது ஃபேவரிட் இடமான இமயமலைக்குக் கிளம்ப தயாராகிவிட்டார் என்கிறார்கள்.

இம்முறை திரும்ப கொஞ்ச அதிக காலதாமதமாகலாம்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram

logo
Andhimazhai
www.andhimazhai.com