முரசொலியில் ரஜினி கட்டுரை
முரசொலியில் ரஜினி கட்டுரை

கருணாநிதி- எம்.ஜி.ஆர். பிரிவு: ரஜினி கேட்ட ரகசிய ஆடியோ!

தி.மு.க.விலிருந்து பிரிந்து அ.தி.மு.க. எனும் தனிக் கட்சியை முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரன் தொடங்கியபோது, எம்.ஜி.ஆருக்கும் எஸ்.எஸ்.ராஜேந்திரனுக்கும் இடையே நடைபெற்ற உரையாடலை நடிகர் இரஜினிகாந்த் கேட்டுள்ளார். இதுகுறித்து இரஜினி இன்று முரசொலி நாளேட்டில் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார்.

அந்தக் கட்டுரையிலிருந்து... :

”பல நேரங்­க­ளில் நான் கலைரு­டன் நெருங்­கிப் பழகிஇருக்­கி­றேன். அவர் எந்த ஒரு விஷ­யத்­திற்­கும் நான் அவரை கவ­னித்­துப் பார்த்­த­தில் எந்த ஒரு முடி­வை­யும் எடுத்­தோமா கவிழ்த்­தோமா என்று எடுக்­க­மாட்­டார். அதற்கு சம்­மந்­தப்­பட்­ட­வர்­க­ளின் பல பேரு­டன் விசா­ரித்து, பேசி, விவா­தித்­து­ தான் எந்த ஒரு முடி­வை­யும் எடுப்­பார். அப்­படி இருக்­கும் போது எம்.ஜி.ஆர் அவர்­களை கட்­சி­யில் இருந்து நீக்­கும் முக்­கி­ய­மான முடிவை நிச்­ச­யம் கலை­ஞர் அவர்­கள் பல பேரின் ஆலோ­ச­னை­களை கேட்­டு­தான் எடுத்­தி­ருப்­பார்.

எனக்கு தெரிந்த ஒரு­வர். அவர் பெயர் கூற இய­லாது. அவர் எனக்கு ஒரு ஆடியோ கேசட்டை கொடுத்து “இதை யாரி­ட­மும் கொடுக்க வேண்­டாம். நீங்­கள் மட்­டும் கேட்டு பிறகு என்­னி­டமே திருப்­பிக்­கொ­டுத்து விடுங்­கள்” என்று கூறி­னார்.அது 1972 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். கட்­சியை விட்டு நீக்­கப்­பட்ட பிறகு அவர்க்­கும் எஸ்.எஸ். ராஜேந்­தி­ரனுக்கும் நடந்த தொலைப்­பேசி உரை­யா­டல் ஆகும்.

அதில் எஸ்.எஸ்.ஆர். “அண்ணே... ஏதோ கெட்ட நேரம் அவ­சர அவ­ச­ர­மாக என்­னென்­னமோ நடந்து விட்­டது. வருங்­கா­லத்­தில் கழ­கத்­திற்கு இத­னால் பெரிய இழப்பு ஏற்­ப­டும். வேறு யாரும் இல்­லா­மல் நீங்­கள் இரு­வர் மட்­டும் ஒரு பொது இடத்­தில் சந்­தித்து மனம் விட்­டுப்­பே­சி­னால் எல்­லாம் சரி ஆகி­டும். கலை­ஞ­ரி­டம் நான் பேசு­கி­றேன். எனக்­காக இதை செய்­யுங்­கள்” என்று கூறு­வார்.

அதற்கு எம்.ஜி.ஆர். “இல்லை தம்பி.. என்­னு­டைய விசு­வா­சி­கள் எனக்கு ஆத­ர­வாக போராட்­டங்­கள் செய்து என்­னு­டைய அபி­மா­னி­கள் என்று அடை­யா­ளம் காட்­டிக் கொண்டு விட்­டார்­கள். நான் திரும்பி கட்­சி­யில் சேர்ந்­தால் என்­னு­டைய அபி­மா­னி­களை கட்­சி­யில் உள்­ள­வர்­கள் முந்­தைய மாதி­ரிப் பார்க்க மாட்­டார்­கள். அவர்­க­ளைத் தனி­மைப்­ப­டுத்­து­வார்­கள் அவர்­கள் எல்­லாம் உதி­ரிப்­பூக்­கள் ஆகி­வி­டு­வார்­கள். அவர்­க­ளுக்­கா­கவே நான் தனிக்­கட்சி ஆரம்­பிக்க வேண்­டும். எனக்கு வேறு வழி­யில்லை. தப்­பாக நினைத்­துக் ­கொள்­ளாதே” என்று அந்த உரை­யா­டல் முடிந்­தி­ருக்­கும்.

அதன் பின். எம்.ஜி.ஆர். அ.தி.மு.க. என்ற கட்­சியை உரு­வாக்­கி­னார். அதன் பின் யார் யார் எம்.ஜி.ஆர். கட்­சியை விட்டு நீக்க வேண்­டும் என்று சொன்­னார்­களோ.. அதில் பல பேர் ஒவ்­வொ­ரு­வ­ராக கட்­சி­யி­லி­ருந்து விலகி எம்.ஜி.ஆர். பக்­கம் போனார்­கள்.

அத­னால் கலை­ஞ­ரின் இத­யம் எவ்­வ­ளவு வேத­னை­யில் துடித்­தி­ருக்­கும்? எதை­யும் தாங்­கும் இத­யம் என்று அண்ணா இவரை நினைத்து தான் சொன்­னாரோ?” என்று இரஜினிகாந்த் முரசொலி கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.  

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com