த.வெ.க.தேர்தல் மேலாண்மைப் பொதுச்செயலாளர்ஆதவ் அர்ஜூனா கடந்த 14ஆம்தேதி பேசுகையில், நடிகர் இரஜினிகாந்த் மிரட்டப்பட்டதால்தான் அரசியலைவிட்டு ஒதுங்கினார் என்கிறபடி கருத்துதெரிவித்தார். அதற்கு பலதரப்பினரும் எதிர்ப்பும் அதிருப்தியும்தெரிவித்தனர்.
நயினார் நாகேந்திரன்தொடங்கி எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடிபழனிசாமிவரை இரஜினிக்குஆதரவாகக் கருத்து வெளியிட்டுள்ளனர்.
ஆனால், இந்த விவகாரத்தில் அமைதிகாத்து வந்த இரஜினிகாந்த், இன்று மதியம் தன்னுடைய கருத்தை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கை விவரம்:
``தவெக கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் திரு.ஆதவ் அர்ஜுனா அவர்கள் சமீபத்தில் என்னைப் பற்றி உண்மைக்கு மாறான ஒரு கருத்தைத் தெரிவித்திருந்தார்.
அவருடைய அவதூறுக் கருத்தைக் கண்டித்து, எனக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த தமிழக சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் மதிப்பிற்குரிய எடப்பாடி திரு.பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் திரு.நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர் திரு.எல்.முருகன், தமிழக அமைச்சர் திரு.ரகுபதி, திரு.தொல்.திருமாவளவன், திரு.எஸ்.பி.வேலுமணி, நண்பர் திரு.அண்ணாமலை, திரு.அர்ஜுனமூர்த்தி, திரு.அன்புமணி ராமதாஸ், திரு.ஜி.கே. வாசன், திரு.ஜான் பாண்டியன், திரு.புகழேந்தி மற்றும் பல கட்சி அரசியல் தலைவர்கள், திரு.அமீர், திரு.ஜி.தனஞ்சயன் மற்றும் திரையுலக நண்பர்கள், மற்றும் திரு.நக்கீரன் கோபால், சாணக்கியா திரு.ரங்கராஜ் பாண்டே மற்றும் ஊடகத்துறையினர், என்னை வாழவைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
"காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்"
வாழ்க தமிழ்நாடு! வளர்க தமிழக மக்கள்!! ஜெய்ஹிந்த்!!!
அன்புடன்
இரஜினிகாந்த்" என்று இரஜினியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.