மிக்ஜம் புயல்: ராஜ்நாத்சிங் நாளை சென்னை வருகை!

மிக்ஜம் புயல்: ராஜ்நாத்சிங் நாளை சென்னை வருகை!

சென்னையில் மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாளை நேரில் பார்வையிடவுள்ளார்.

வங்கக் கடலில் உருவான மிக்ஜம் புயலால் தமிழ்நாட்டில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளன.

பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், மிக்ஜம் புயல் மழைக்கு சென்னையில் கடந்த இரு நாள்களில் மட்டும் 19 போ் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புயலால் பாதிக்கப்பட்டவற்றை சரி செய்யவும் சீரமைப்பு பணிகளுக்காகவும் நிதி வழங்கி உதவுமாறு தமிழ்நாடு தரப்பிலிருந்து கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாளை தமிழ்நாட்டிற்கு வரவுள்ளார். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஹெலிகாப்டர் மூலம் பார்வையிடவுள்ளார்.

அதனைத் தொடர்ந்து முதல்வர் மு.க. ஸ்டாலினையும், அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்தித்துப் பேசவுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com