ராமநாத சுவாமி கோயிலில் வழிபாடு செய்யும் பிரதமர்
ராமநாத சுவாமி கோயிலில் வழிபாடு செய்யும் பிரதமர்

ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் பிரதமர் வழிபாடு!

ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாத சுவாமி கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி வழிபாடு மேற்கொண்டார்.

தமிழகத்துக்கு 3 நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி நேற்று சென்னை வருகை தந்தார். பின்னர் நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளை அவர் தொடங்கி வைத்தார். 2ஆவது நாள் சுற்றுப்பயணமாக அவர் இன்று காலை திருச்சி அரங்கநாதரை தரிசனம் செய்தார்.

இதையடுத்து, ராமேஸ்வரம் வந்தடைந்த பிரதமர் நரேந்திர மோடி அக்னி தீர்த்தக் கடலில் நீராடிய பின்னர், ராமநாத சுவாமி கோயிலில் உள்ள 22 புண்ணிய தீர்த்தக் கிணறுகளிலும் நீராடினார்.

பின்னர், ராமநாத சுவாமியை தரிசனம் செய்தார். சுவாமி தரிசனத்துக்குப் பின் கோயில் பிராகாரத்தை வலம் வந்து வழிபட்டார். கோயில் நிர்வாகத்தின் சார்பில் பிரதமர் மோடிக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

இன்று இரவு ராமேஸ்வரத்தில் உள்ள ராமகிருஷ்ணா மடத்தில் தங்கும் பிரதமர், நாளை காலையில் ராமநாத சுவாமி கோயிலில் மீண்டும் தரிசனம் செய்கிறார். பின்னர் கார் மூலம் தனுஷ்கோடி அருகே உள்ள கோதண்டராமர் கோயில்லுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார். பின்னர், தான் சேகரித்த தீர்த்தங்களுடன் ராமேஸ்வரத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் மதுரை விமான நிலையம் செல்லும் அவர் தனி விமான மூலம் செல்லி செல்கிறார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com