பெலிக்ஸ் ஜெரால்டு
பெலிக்ஸ் ஜெரால்டு

யூட்டியூபர் பெலிக்ஸ் ஜெரால்டு கைது!

பிரபல  யூட்டியூபர் சவுக்கு சங்கரின் நேர்காணலை வெளியிட்ட ரெட் பிக்ஸ் யூட்டியூபு தளத்தின் ஆசிரியர் பெலிக்ஸ் ஜெரால்ட் இன்று காலை கைது செய்யப்பட்டார்.

ஏற்கெனவே சவுக்கு சங்கர் கைது தொடர்பாக கருத்து தெரிவித்திருந்த உயர்நீதிமன்றம், இந்தப் பேட்டியை வெளியிட்ட ரெட்பிக்ஸ் ஊடகத்தின் நிர்வாகியைத்தான் முதலில் கைது செய்திருக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்தது.

அதைத் தொடர்ந்து பெலிக்சின் சார்பில் முன் ஜாமின் பெறுவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதில் சாதகமான பலன் கிடைக்கவில்லை.

இந்த நிலையில், தில்லியில் வைத்து தமிழக காவல்துறையினர் அவரைக் கைதுசெய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com