சட்டப்பேரவையில் தீர்மானம் வாசிக்கும் முதல்வர்
சட்டப்பேரவையில் தீர்மானம் வாசிக்கும் முதல்வர்

10 மசோதாக்கள் மறுநிறைவேற்றம்: அ.தி.மு.க., பா.ஜ.க. வெளிநடப்பு!

தமிழக சட்டப்பேரவையின் இன்றைய சிறப்புக் கூட்டத்தில் அண்மையில் ஆளுநரால் திருப்பியனுப்பப்பட்ட மசோதாக்கள் மீண்டும் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொண்டுவந்த தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

சட்டப்பேரவை சிறப்புக்கூட்டம் பேரவைத் தலைவர் அப்பாவு உரையுடன் இன்று காலை தொடங்கியது. இதில், கடந்த 13ஆம் தேதி ஆளுநர் திருப்பி அனுப்பிய 10 மசோதாக்கள் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனித்தீர்மானத்தை முன்வைத்தார். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர்கள், முதலமைச்சர் ஸ்டாலின் பதிலளித்தனர்.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ”ஆளுநர் மசோதாக்களை நிறுத்தி வைத்துள்ளார். ரத்து செய்ததாக குறிப்பிடவில்லை. வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. மசோதாக்களில் இருக்கும் சட்ட சிக்கல்கள் குறித்து அரசு ஆராய வேண்டும்.” என்றார்.

அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் தீர்மானம் நிறைவேற்றப்படும் முன்னரே வெளிநடப்பு செய்தனர்.

அதேபோல், முதலமைச்சர் கொண்டுவந்த தீர்மானத்துக்கு பா.ஜ.க. உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமைச்சர்களின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகத்தில் இருந்த ’ஜெயலலிதா’பெயரை நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பேரவையில் இருந்து அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்வதாக கூறினார்.

நிறைவாக, ஆளுநர் திருப்பி அனுப்பிய 10 மசோதாக்களை தொடர்புடைய துறைகளின் அமைச்சர்கள் சட்டப்பேரவையில் மீண்டும் முன்வைத்தனர். அவை ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com