திருச்சி விசிக வெல்லும் சனநாயகம் மாநாட்டில் தொல்.திருமாவளவன் உரை
திருச்சி விசிக வெல்லும் சனநாயகம் மாநாட்டில் தொல்.திருமாவளவன் உரை

அமைச்சரவை, மேலவைகளில் பட்டியல் பிரிவினருக்கு இட ஒதுக்கீடு!- வி.சி.க. மாநாட்டில் தீர்மானம்!

திருச்சி மாவட்டம் சிறுகனூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் 'வெல்லும் சனநாயகம்' என்ற மாநாடு இன்று நடைபெற்று வருகிறது.

திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட கூட்டணி கட்சிகளின் தலைவர் இதில் பங்கேற்றனர்.

இம்மாநாட்டில் கட்சியின் தலைவர் திருமாவளவன் தீர்மானங்களை வாசிக்க, மாநாட்டில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.

முக்கிய தீர்மானங்கள்:

1. பாலஸ்தீன மக்களுக்கும், ஈழத் தமிழர்களுக்கும் ஆதரவு

2. பெரும்பான்மைவாத அரசியலைப் புறக்கணிப்பு

3. மணிப்பூரில் அமைதியை நிலைநாட்டுதல்

4. சென்னையை இந்தியாவின் 2வது தலைநகராக அறிவித்தல்

5. சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும்

6. வழக்காடு மொழியாகத் தமிழை அறிவித்தல்

7. ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையைத் திரும்பப் பெற வேண்டும்

8. ஆளுநர் பதவியை ஒழித்தல்

9. மாநில அதிகாரங்களை அதிகரிக்க வேண்டும்

10. அமைச்சரவையிலும், மேலவைகளிலும் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு

11. ஆணவக் கொலைகளைத் தடுப்பதற்கு சட்டம் இயற்றுதல்

12. பழங்குடியினருக்கு சாதிச் சான்றிதழ் வழங்குதல்

13. வகுப்புவாத வன்முறைத் தடுப்பு சட்டத்தை இயற்றுதல்

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com