‘SIR’ நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம்!

அனைத்து கட்சி கூட்டம்
அனைத்து கட்சி கூட்டம்
Published on

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் நிறுத்தி வைக்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப்பணிகள் வரும் 4ஆம் தேதி தொடங்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்த நடைமுறைக்கு திமுக கூட்டணி கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், “SIR நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் நிறுத்தி வைக்க வேண்டும் இல்லாவிட்டால், உச்சநீதிமன்றத்தில் அனைத்துக் கட்சிகளும் வழக்குகள் தாக்கல் செய்யும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பில் உள்ள குறைகள் களையப்பட்டு, உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலை வெளிப்படையாகக் கடைப்பிடித்து, உரிய அவகாசம் தரப்பட வேண்டும். வரும் 2026 தேர்தலுக்குப் பின்பு, எக்கட்சிக்கும் சார்பற்ற நிலையில் தேர்தல் ஆணையம் S.I.R-ஐ நடத்த வேண்டும் ” என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக அனைத்து கட்சி கூட்டத்தில் பேசிய முதலமைச்சர், நேர்மையான தேர்தல் நடத்த உண்மையான வாக்காளர் பட்டியல் அவசியம் என்பதை யாரும் மறுக்கவில்லை, ஆனால் அதற்காக உரிய கால அவகாசத்தை கொடுக்க வேண்டும். பதற்றமில்லாத சூழலில் அதை செய்ய வேண்டும். தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பாக முழுமையான திருத்த பணிகள் செய்ய நினைப்பது உண்மையான வாக்காளர்களை நீக்குவதற்கான தந்திரம். மக்கள் வாக்குரிமையை பறிக்கும் விதமாகவும் அவர்களை அச்சுறுத்தும் விதமாகவும் பீகாரில் வாக்களார் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் நடைபெற்றன. அது போல தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களிலும் நடைபெற உள்ளது என தெரிவித்தார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com