சுற்றுலா பயணிகளுக்கு புதுசு... கொடைக்கானல், ஊட்டியில் ரோப் கார் வசதி!

Rope car
ரோப் கார்
Published on

சட்டப்பேரவையில் சுற்றுலாத் துறையின் அறிவிப்புகளை அமைச்சர் ராஜேஷ்குமார் வெளியிட்டார்.

அறிவிப்பு விவரம்:

1) சுற்றுலாத் தொழில் சார்ந்த அமைப்புகளின் திறனை மேம்படுத்த ரூ. 1 கோடி செலவில் சுற்றுலாத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கப்படும்.

2) ரூ. 60 லட்சம் செலவில் கிராமிய சுற்றுலாத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

3) கொடைக்கானல், ஊட்டியில் ரோப் கார் வசதி அறிமுகப்படுத்தப்படும்.

4) சென்னையை கூட்டங்கள், ஊக்குவிப்புகள், மாநாடுகள், கண்காட்சிகள் நடைபெறும் முன்னணி நகரமாக உயர்த்திட ‘சென்னை மைஸ் பிரமோசன் பியூரோ’ என்ற அமைப்பு உருவாக்கப்படும்.

5) தமழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் படகு இல்லங்களில் உள்ள இயந்திரப் படகுகள் ரூ. 17.82 கோடியில் மின்படகுகளாக மாற்றியமைக்கப்படும்.

6) தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் தங்கும் விடுதிகள், படகு இல்லங்களில் இ-சார்ஜிங் நிலையங்கள் ரூ. 5 கோடியில் ஏற்படுத்தப்படும்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com