“4 ஆண்டுகளில் ரூ.4 லட்சம் கோடி ஊழல்..!”

ஆளுநரிடம் மனு அளிக்கும் எடப்பாடி பழனிசாமி
ஆளுநரிடம் மனு அளிக்கும் எடப்பாடி பழனிசாமி
Published on

தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் 4 ஆண்டுகளில் ரூ.4 லட்சம் கோடி ஊழல் நடந்துள்ளது; இது தொடர்பாக விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று மனு அளித்தார்.

ஆளுநர் ஆர்.என்.ரவியை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக குழு இன்று சந்தித்தது. எடப்பாடி பழனிசாமியுடன் அதிமுகவின் கேபி முனுசாமி, எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம், நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி உள்ளிட்டோர் ஆளுநர் ரவியை சந்தித்தனர்.

இந்த சந்திப்பு தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, திமுகவின் 4 ஆண்டு கால ஆட்சியில் ஒவ்வொரு துறையிலும் பல்லாயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது. 4 ஆண்டுகளில் ரூ.4 லட்சம் கோடி ஊழல் நடந்துள்ளது.

திமுக அரசின் ஊழல்கள் தொடர்பாக ஒரு விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும்; இந்த விசாரணை கமிஷனை உச்சநீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆளுநரிடம் மனு கொடுத்துள்ளோம். இந்த ஊழல் தொடர்பான ஆவணங்கள் அடங்கிய புத்தகத்தை ஆளுநர் ரவியிடம் கொடுத்திருக்கிறோம் என்றார்.

மேலும், தேர்தலை மனதில் வைத்துதான் லேப்டாப் வழங்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன்கார்டுதாரர்களுக்கும் தலா ரூ.5,000 வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் எடப்பாடி பழனிசாமி.

logo
Andhimazhai
www.andhimazhai.com