
வாஷிங் மெஷின், ஃபிரிட்ஜ், மிக்ஸி உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்களை புதிதாக வாங்க, ஏற்கெனவே இருக்கும் பழைய பொருட்களை கடைகளில் மாற்றிக் கொள்ள அரசு சார்பில் ரூ. 8000 இல்லத்தரசி கூப்பன் வழங்கப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதியாக கொடுக்கப்பட்டுள்ளது.
திமுகவின் தேர்தல் அறிக்கையை முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று மாலை அண்ணா அறிவாலயத்தில் வெளியிட்டார்.
அவற்றில் சில…
காலை உணவுத் திட்டம் 8ஆம் வகுப்பு வரை விரிவுப்படுத்தப்படும்.
மகளிர் உரிமைத் தொகை 2000 ரூபாயாக உயர்த்தப்படும்
இலவச மின்சாரம் விவசாயிகளுக்கு எந்த வீத மீட்டரும் பொருத்தப்படாத நவீன மின்சார பம்புசெட்டுகள் வழங்கப்படும்
அடுத்த 5 ஆண்டுகளில் 10 லட்சம் புதிய வீடுகள் கட்டித்தரப்படும்
முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டத்தில் சேர்க்கப்படுவதற்கான வருமான வரம்பு ரூ. 5 லட்சமாகவும் காப்பீட்டுத் தொகை ரூ. லட்சமுமாக உயர்த்தப்படும்.
புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன் திட்டத்துக்கான உதவித்தொக ரூ. 1500 ஆக உயர்த்தி வழங்கப்படும்
நெல் கொள்முதல் விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 3,500ஆகவும், கடும்பு கொள்முதல் விலை டன் ஒன்றுக்கு ரூ. 4,500ஆகவும் உயர்த்தி வழங்கப்படும்.
பால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ. 5 உயர்த்தப்படும்
முதியோர் உதவித் தொகை ரூ. 1200 லிருந்து 2000 ஆகவும், மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகை 1500- லிருந்து ரூ. 2500ஆகவும் உயர்த்தப்படும்.
மீன்பிடி தடைக்கால சிறப்பு நிவாரணத்தொகை 8000 ரூபாயிலிருந்து 12000 ரூபாயாக உயர்த்தப்படும்.
சொம்மொழி மாநாடு சென்னையில் நடத்தப்படும்
மகளிர் சுய உதவிக் குழுக்கள் தொழில் தொடங்க 5 லட்சம் வரை மானிய வங்கி கடன்
உயர் கல்வி பயிலும் 35 லட்சம் மாணவர்களுக்கு இலவச லேப்டாப்.
இல்லத்தரசிகள் தங்கள் வீட்டுக்கு தேவையான வாசிங்மெசின், டிவி, கிரைண்டர், மிக்சி உள்ளிட்ட வீட்டு உபயோக பொருள்களை வாங்கவோ அல்லது ஏற்கெனவே பயன்படுத்தும் இத்தகை பொருள்களை மாற்றவோ இல்லத்தரசிகள் என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படும். இதற்காக, வருமான வரி செலுத்தாத குடும்பத்தினருக்கு ரூ. 8000 மதிப்பிலான கூப்பன் வழங்கப்படும்.