ரூ.99,875 கோடி வருவாய்... டிச.23ஆம் தேதிவரை வணிகவரி மூலம்!

Tamilnadu government secretariat
தமிழ்நாடு அரசு தலைமைச்செயலகம்
Published on

வணிகவரித்துறை வருவாய் நடப்பு 2024-25 நிதி ஆண்டில் டிசம்பர் மாதம் நேற்று (23.12.2024) வரை ரூ. 99,875 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது என வணிகவரி- பதிவுத் துறை அமைச்சர் பி மூர்த்தி தெரிவித்துள்ளார்.

சென்னை, நந்தனம் ஒருங்கிணைந்த வணிகவரி (ம) பதிவுத்துறை அலுவலகக் கூட்டரங்கில், இன்று, அனைத்து இணை ஆணையர்களின் பணித்திறன் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், மறைந்த வணிகர்களின் குடும்பத்தினரான திருத்துறைப்பூண்டி பா.சுசிலா, ராசிபுரம் யு.கஸ்தூரி, திருவண்ணாமலை வி.விஜயலட்சுமி ஆகியோருக்கு தமிழ்நாடு வணிகர் நல வாரியத்தின் சார்பில் குடும்ப நல நிதி உதவியாக தலா 3 மூன்று லட்சம் ரூபாய் காசோலையை அமைச்சர் வழங்கினார்.

கூட்டத்தில் பேசிய அமைச்சர், வணிகவரித்துறை வருவாய் நடப்பு 2024-25 நிதி ஆண்டில் டிசம்பர் மாதம் நேற்று (23.12.2024) வரை ரூ. 99,875 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டி, வரி வருவாய் வளர்ச்சியில் இந்திய அளவில் தற்பொழுது தமிழ்நாடு மாநிலம் முதன்மையாக விளங்குவதை சுட்டிகாட்டி வரும் மாதங்களில் அனைத்து இணை ஆணையர்களும் மேலும் சிறப்புடன் உரிய பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில் வணிகவரி- பதிவுத் துறை அரசு முதன்மைச் செயலாளர் பிரஜேந்திர நவ்நீத், வணிகவரித் துறை ஆணையர் முனைவர் டி. ஜகந்நாதன் உட்பட பலரும் கலந்துகொண்டனர். 

logo
Andhimazhai
www.andhimazhai.com