எழுத்தாளர் தேவிபாரதி
எழுத்தாளர் தேவிபாரதி

தேவிபாரதிக்கு சாகித்ய அகாதெமி விருது அறிவிப்பு!

'நீர் வழிபடூஉம்' நாவலை எழுதிய எழுத்தாளர் தேவி பாரதி சாகித்ய அகாதெமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய மொழிகளில் வெளியாகியுள்ள சிறந்த இலக்கியப் படைப்புகளைப் பெருமைப்படுத்தும் விதமாக 1954-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் மிகச் சிறந்த நூல்களுக்கு சாகித்ய அகாதெமி விருது மத்திய அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் ஈரோடு மாவட்டம் கஸ்பாபேட்டையைச் சேர்ந்த எழுத்தாளர் தேவி பாரதி இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாதெமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

ராஜசேகரன் என்ற இயற்பெயர் கொண்ட தேவி பாரதி, ஆசிரியர் பயிற்சிபெற்று ஆரம்பப்பள்ளி ஆசிரியராக பணியாற்றினார்.பின்னர், ஆசியர் வேலையை உதறிவிட்டு, சில காலம் திரைத்துறையில் பணியாற்றினார். அதன்பின்னர், காலச்சுவடு மாத இதழிலும் ஓராண்டுக்காலம் புதுயுகம் தொலைக்காட்சியிலும் வேலைபார்த்தார்.

சிறுகதை மூலம் இலக்கியவாதியாக அறியப்பட்ட தேவிபாரதி, தன் முதல் நாவலான ‘நிழலின் தனிமை’ மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அது அவரின் தலைசிறந்த படைப்பாகப் பார்க்கப்படுகிறது. அதன் பின்னர் ‘நட்ராஜ் மகராஜ்’, ‘நீர்வழுப்படூஉம்’, ’நொய்யல்’ ஆகிய நாவல்களை எழுதி கவனம் பெற்றார்.

இதுவரை ஆறு சிறுகதை தொகுதிகளும் மூன்று கட்டுரை தொகுப்புகளையும் கொண்டு வந்துள்ளார்.

தற்போது சாகித்ய அகாதெமி விருது அறிவிக்கப்பட்டுள்ள நீர்வழிப் படூஉம் நாவல், சிறுகுடி மக்களின் வாழ்வியலையும் ஒரு தனிமனிதனின் வாழ்க்கையின் வீழ்ச்சியையும், அதனால் அவனுடன் இந்த சமூகம் கொள்ளும் உறவையும் உணர்வுப்பூர்வமாக எடுத்துச் சொல்வதாகும்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com